NFSComt https://m.facebook.com/nafras.mass?ref=bookmarks
nfscomt.blogspot.com
nfscomt.blogspot.com

வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்கள்

கமு/சது/அஸ்-சிராஜ் மகா வித்தியாலயத்தில் உயர்த்தரத்தில் கல்வி கற்று கொண்டிருக்கும் ஏ.ஆர். முகம்மட் அஸ்கான் என்ற மாணவன் தனது அறிவினைக் கொண்டு அவரது சொந்தக் கையெழுத்தினால் ஒரு எழுதாக்கத்தை வரைந்துள்ளார்.






ஒருநாள் நினைவுத் துளிகள்

மேற்கு வானம் சிவக்க பகலின் சொந்தக்காரன் மறைந்துவிடப்போகிறானோ என்ற அச்சத்தில் பறவைகள் வீடு திரும்பும் அழகிய மாலைப் பொழுதது. மூன்று நண்பர்கள் ஒன்று கூடி செல்லுமிடம் திட்டமிடாது வெட்டிக்கதைபேசி,வந்தவழி அறியாது, காணும் வழி யாவும் எந்தவழி என்றறிந்தது. நேரம் கழிவதிலும் கூட நினைப்பின்றியே துவிச்சக்கர வண்டி ஊண்டி மிதித்துக் கொண்டிருந்தோம்.

எனக்குள் ஏனோ என்னவளின் யோசனை. அவளை பார்க்கவேண்டும் போலிருந்தது. இடைநடுவே நண்பர்களை கழட்டிவிட்டு "மொரப் பொண்ணப் பார்க்க   யாரோட அனுமதி வேணும்" என்கிற வீராப்போடு பகல் பொழுதின் அரசன் மறையும்முன் நான் அவள் வீடு சேர்ந்தேன். வண்டியை ஓரமாக சாத்தி, தலையை மெல்லமாக கையால் கலைத்து சரி செய்து கொண்டேன். கதவருகே சென்றதும் அவள் குரலோசை. கதவை திறந்தேன். ஒரு சின்னப் பொண்ணுக்கு என் பொண்ணு பாடம் சொல்லிக் கொடுக்குது. வந்தது எதற்கென காட்டிக் கொள்ளாது, "மாமி...மாமி..." என்று சத்தமாக அழைத்தேன். ஒங்க மாமி  எங்க போனிச்சோ தெரியல. என்று சிரித்திக்கொண்டே பதில் சொன்னாள். சரி வந்த வேலை முடிந்துவிட்டது நான் வாரன் என்று கூறி வெளியில் சென்று கதவை சாத்திக்கொண்டேன்.

அவள் முகம், அவள் குரல் பார்க்க கேட்க வேண்டும் போலிருந்தது. திடீரென்று கதவை திறந்து அவள் பெயரை மெல்லமாக உச்சரித்தேன். மீண்டும் அதே சிரிப்போடு பார்த்தாள். உனக்கு தனியா இருக்க பயமா இல்லையா? எனக் கேட்டேன். எனக்கெதுக்குப் பயம் என்றாள். சிரித்துக்கொண்டே அவளருகே நின்று நான் என் ஒரு கை விரல்களால் என் பார்வையை அவள் பார்வையோடு ஒன்று சேர்த்து அவள் கண்ணம் வருடினேன். கண்களை இருகப் பொத்தி பொன் சிரிப்போடு மெல்லக்கண்களை திறந்து எனைப் பார்த்தாள். அவள் பார்த்தது என்னவோ ஒரு சில நொடிகள் என்றாலும், அன்று அவள் பார்வையில் விழுந்த நான் இன்றும் என்னவள் நினைவுடனே.........
வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்கள் வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்கள் Reviewed by NFSComt on November 11, 2018 Rating: 5

No comments:

nfscomt.blogspot.com
Theme images by RBFried. Powered by Blogger.