அம்பாறை,மத்திய முகாம்,12ம் கிராமம், மூன்றாம் வட்டார பிரதேசத்தில் வசிக்கும் முஹமட் அப்னாஸ் எனும் மாணவனால் ஒரு குறும்படம் இயக்கப்பட்டு கடந்த 2018/11/07 புதன்கிழமை அன்று தொழில்நுட்ப கல்லூரியில் திரையிடப்பட்டது.இந்த குறும்படத்தை பார்வையிட பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.அதை தொடர்ந்து தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அக் குறும்படத்தை காண ஆர்வமாக வருகை தந்தனர்.இக் குறும் திரைப்படம் பார்த்த அனைவரும் வெகுவாக பாராட்டு தெரிவித்தனர்.மனிதனின் அடிப்படை வாழ்க்கை பற்றி முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் உருவாக்கப்பட்ட இக் குறும்படம் அனைவரின் பாராட்டையும் பெற்றது.இது போன்ற குறும்படம் இப் பிரதேசத்தில் உருவானது இதுவே முதல் முறை ஆகும்.வேறு யாரும் முயன்றிடாத பாதையில் இம் மாணவன் மட்டும் சென்றமைக்கு எமது பாராட்டுகள்.இக் குறும்படம் வாழ்வியல் பற்றிய யதார்த்தமான விடயங்களை கூறுவதுடன் இந்த உலகின் உண்மையான முகத்தையும் பிரதிபலிப்பதாக உள்ளது.
இக் குறும்படத்தில் இயக்கம் மட்டுமன்றி ஒளித்தொகுப்பு மற்றும் நடிப்பு என்பவற்றையும் அப்னாஸ் அவர்களே மேற்கொண்டு உள்ளார்.இதன் படத்தொகுப்பு முஹமட் அfபி எனும்போது சாதாரண தரம் பயிலும் மாணவனால் மேற்கொள்ளப்பட்டது.இக் குறும்படத்தில் பணியாற்றிய விடயங்களை எம்முடன் பகிர்ந்து கொள்ளும் போது எந்த ஒரு வசதிகளும் இன்றி தனி மனித முயற்சியால் உருவான திரைப்படம் என கூறும் இயக்குனர் தன் சகோதரர் முஹமட் அfப்சர் தனக்கு மிகவும் உதவியாக இருந்ததாக கூறினார்.இதற்கு தேவையான சில உபகரணங்களை அவரே உருவாக்கி தந்ததாகவும் அதற்கு தன் சகோதரர்க்கு நன்றி கூறுவதாக கூறினார்.மேலும் திரு.ஹமீட் மற்றும் திரு.ரிஸ்பான் என்பவர்களின் உதவிக்கும் நன்றி கூறியதுடன் தனக்கு திரையிட உதவி புரிந்த தொழில்நுட்ப கல்லூரி ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.இது போன்ற திறமை கொண்ட இளைஞர்களுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதுடன் அம் மாணவன் தன் இலட்சியத்தை அடைவதற்கு வாழ்த்து தெரிவிக்கின்றோம்.
நாவிதன்வெளியில் முதல் குறும் படம் நேற்று வெளியீடு
Reviewed by NFSComt
on
November 08, 2018
Rating:
Reviewed by NFSComt
on
November 08, 2018
Rating:









No comments: