NFSComt https://m.facebook.com/nafras.mass?ref=bookmarks
nfscomt.blogspot.com
nfscomt.blogspot.com

டயர்கழிவுகளை அகற்றுமாறு சாளம்பைக்கேணி- 03 மக்கள் புகார்

Published by: ACM Ashir கடந்த 2018/09/20 ம் திகதி மத்தியமுகாம் நகரில் களஞ்சியசாலை ஒன்றில் மீள்சுழற்சிக்காக வைக்கப்பட்ட டயர்கள் தீ விபத்துக்குள்ளானது.இதனை தொடர்ந்து மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துமென டயர் குப்பைகளை ரெக்டர் மூலமாக ஏற்றிவந்து சாளம்பைகேணி-03. 1ம் வட்டார மையவாடி விவசாய உள்வீதியோரம் பரந்த அளவில் கொட்டியுள்ளனர். அச்சயமம் இதனை எப்படி இங்கு கொட்டுவீர்கள்! என மக்கள் கேட்ட போது இது தொடர்பாக 1ம் வட்டார நூறாணிய்யா ஜு.ப. தலைவர் J.செயின் அவர்களிடம் அனுமதி கேட்டதாகவும் இரண்டு நாட்களுக்குள் குப்பைகளை புதைத்து விடுவோம் என்று குறித்த நபர் கூறியுள்ளார்.ஆனால் இதுவரையும் அக்கழிகள் அதே இடத்தில் உள்ளதால் துர்நாற்றம் வீசிவருகிறது இதனால் அதனை அண்மித்த பகுதிகளில் வாழும் சிறு குழந்தைகள்,கர்ப்பினிப்பெண்கள் மற்றும் பொதுமக்களும் தூய வளியினை சுவாசிப்பதில் பாரிய அசௌகரியங்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவ்வீதியால் பயணிக்கும் விவசாயிகளுக்கு போக்குவரத்து சிக்கலும் ஏற்பட்டுள்ளது. எனவே குறித்த டயர்கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்துமாறு மக்கள் புகார் விடுக்கின்றனர்.
டயர்கழிவுகளை அகற்றுமாறு சாளம்பைக்கேணி- 03 மக்கள் புகார் டயர்கழிவுகளை அகற்றுமாறு சாளம்பைக்கேணி- 03 மக்கள் புகார் Reviewed by NFSComt on September 28, 2018 Rating: 5

No comments:

nfscomt.blogspot.com
Theme images by RBFried. Powered by Blogger.